Published : 06 Mar 2021 10:19 AM
Last Updated : 06 Mar 2021 10:19 AM
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பொறுப்பாளராக இருக்கும் துணைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்ட நிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பொறுப்பாளராக இருக்கும் துணைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எழுதிய கடிதம் தொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்ததன.
மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்ட புகாரின் நகலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவர் அனுப்பியிருந்தார்.
ஆணையத்தின் தலைமையகம் மற்றும் களத்தில் உள்ள அனைத்து துணைத் தேர்தல் ஆணையர்கள் மற்றும் இதர அலுவலர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படியும், தேர்தல் நடத்தை விதிகளின் படியும் தான் பணியாற்றுகிறார்கள் என்பதை தெளிவுப்படுத்த ஆணையம் விரும்புகிறது.
எங்கேனும் ஒன்றிரண்டு குறைபாடுகள் தென்பட்டால் தேர்தல் ஆணையம் உடனடியாக அதை சரி செய்கிறது.
ஆனால், இது போன்ற புகார்கள் மற்றும் பிரச்சாரம் தேர்தலுக்கு முன்பு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.
மேற்கண்ட செய்தியை பொருத்தவரை, துணைத் தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயினின் நேர்மை மற்றும் நியாயமான செயல்பாடுகள் மீது ஆணையத்திற்கு முழு நம்பிக்கை உள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, அவர் எடுத்த இரு முடிவுகளும் தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுத்தவையே என தெளிவுபடுத்தப்படுகிறது.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT