Published : 24 Nov 2015 09:17 AM
Last Updated : 24 Nov 2015 09:17 AM
பல நாடுகளில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய நகரங் களிலும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என மத்திய உள் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, ஹைதராபாத் நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள் ளிட்ட நகரங்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் நாசவேலையில் ஈடுபடலாம் என உள்துறை அமைச்சகம் எச்சரித் துள்ளது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் நகரில் நேற்றுமுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. சார்மினார், உயர் நீதிமன்றம், ஆளுநர் மாளிகை, முதல்வர் மாளிகை, சட்டப் பேரவை உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிர வாகன சோதனை நடத்தப் பட்டு வருகிறது. சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித் திரியும் நபர்கள் குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கும்படி வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் பலமுறை தீவிர வாத தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT