Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

தமிழ்நாட்டில் திமுக, புதுச்சேரி, அசாமில் பாஜக மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி: ஏபிபி, சி-வோட்டர் கருத்து கணிப்பில் தகவல்

புதுடெல்லி

வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், அசாமில் பாஜகவும், கேரளாவில் இடதுசாரிகளும் ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி, சி-வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் திமுகவும், புதுச்சேரியில் பாஜகவும் ஆட்சியைப் பிடிக் கும் என கருத்து கணிப்பு கூறுகிறது.

அசாமில் 3 கட்டங்களா கவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் பணியிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து 5 மாநில வாக்காளர்களின் மனநிலையை கணித்துள்ளன. கருத்து கணிப்பின் விவரம் வருமாறு:

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும். அக் கட்சிக்கு மொத்தம் உள்ள 294-ல் 148 முதல் 164 இடங்கள் கிடைக்கும். இங்கு 92 முதல் 108 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

இத்தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து போட்டியிட்டாலும் மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும். இக்கூட்டணிக்கு 31 முதல் 39 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 83 முதல் 91 இடங்களில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியை தக்க வைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 47 முதல்55 இடங்கள் மட்டுமே கிடைக்கும். பாஜகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும்.

அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 68 முதல் 76 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு 43 முதல் 51 இடங்களும் பிற கட்சிகளுக்கு 5 முதல் 10 இடங்களும் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுகவுக்கு 41 சதவீத வாக்குகளுடன் 154 முதல் 162 இடங்கள் கிடைக்கும். ஆளும் அதிமுகவுக்கு 29 சதவீத வாக்குகளுடன் 58 முதல் 66 இடங்கள் கிடைக்கும்.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30-ல் 17 முதல் 21 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடிக்கும். கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு 12 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

இவ்வாறு கருத்து கணிப் பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x