Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM
டெல்லி பல்கலைக்கழகத்தின் 97-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பேசியதாவது:
நீண்ட விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் ஏற்படுவதுடன் மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள், இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை உலகின் மிகப்பெரிய சீர்திருத்தம் என தெரிவித்துள்ளன. இதுபோன்ற கல்விக் கொள்கையை தங்கள் நாட்டிலும் அமல்படுத்த விரும்புவதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
நடப்பு கல்வி ஆண்டில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், சுமார் 33 கோடி மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்களை நடத்தப்பட்டன. சுமார் 1,000 பல்கலைக்கழகங்கள், 50 ஆயிரம் கல்லூரிகள், 15 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 1.1 கோடி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். ஜேஇஇ, நீட் உள்ளிட்ட தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT