Published : 27 Feb 2021 03:32 PM
Last Updated : 27 Feb 2021 03:32 PM

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,59,590 ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.44 சதவீதமாகும்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 16,488 பேரில் 85.75 சதவீதத்தினர் இந்த ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இன்று காலை 7 மணி வரை, தமிழகத்தில் 4,45,328 பேர், புதுச்சேரியில் 11,144 பேர் உட்பட, நாடு முழுவதும் 1,42,42,547 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

2,92,312 முகாம்களில் 66,68,974 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 24,53,878 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 51,19,695 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 42-ஆம் நாளில் (பிப்ரவரி 27, 2021) 13,397 முகாம்களில் 7,64,904 பயனாளிகளுக்கு (3,49,020 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 4,20,884 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,63,451 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.17 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 12,771 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,333 பேரும், கேரளாவில் 3,671 பேரும், பஞ்சாபில் 622 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 113 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x