Published : 27 Feb 2021 01:21 PM
Last Updated : 27 Feb 2021 01:21 PM

‘‘மேற்குவங்க தேர்தல்; மே 2-ம் தேதி, எனது கடைசி ட்வீட்; நிறுத்துங்கள்’’- பிரசாந்த் கிஷோர் மீண்டும் பரபரப்பு 

புதுடெல்லி

மே 2-ம் தேதி எனது கடைசி ட்வீட் இடுவதை நிறுத்துங்கள் என மேற்குவங்க மாநில வாக்காளர்களுக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், 2-வது கட்டம் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. 3-வது கட்டம் ஏப்ரல் 6-ம் தேதியும், 4-வது கட்டம் ஏப்ரல் 10-ம் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும். 6-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டத் தேர்தல் தேதி ஏப்ரல் 26-ம் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “குறிப்பிட்ட சில ஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரங்களால் பாஜக வலுவாகக் காண்பிக்கப்படுகிறது. உண்மையில், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப் போகிறது.

என்னுடைய ட்விட்டர் பதிவைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் மேலும் 2-வது சவாலை பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் விடுத்தார். பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லத் தடுமாறப் போகிறது.

என்னுடைய கணிப்பின்படி 100 தொகுதிகளுக்கும் குறைவாகத்தான் பாஜகவுக்குக் கிடைக்கும். ஒருவேளை 200 இடங்களுக்கு குறைவாக பாஜக பெற்றால், அந்தக் கட்சியின் தலைவர்கள் கட்சியிருந்து விலகுவார்களா?'' என்று சவால் விடுத்தார்.

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் தற்போது தனது ட்வீட்டர் பக்கதத்தில் இதனை நினைவூட்டி மீண்டும் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் ஜனநாயகத்திற்காக நடக்கும் மிக முக்கிய போர்களம் மேற்குவங்கம். அம்மாநில மக்கள் சரியான தேர்வின் பக்கம் தாங்கள் உறுதியாக இருப்பதை உணர்த்துகின்றனர். வங்கம் தனது சொந்த மகளையே விரும்புகிறது.

மே 2-ம் தேதி எனது கடைசி ட்வீ்ட் இடுவதை நிறுத்துங்கள்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x