Published : 26 Feb 2021 07:10 PM
Last Updated : 26 Feb 2021 07:10 PM
திரிணமூல் காங்கிரஸ் வலிமையாக உள்ள 24 பர்கானா மாவட்டத்தில் மட்டும் மூன்று தேதிகளில் வெவ்வேறு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, பிரதமர் மோடி மற்றும் அமிஷ் ஷாவின் வசதிக்காக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதா என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், 2-வது கட்டம் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. 3-வது கட்டம் ஏப்ரல் 6-ம் தேதியும், 4-வது கட்டம் ஏப்ரல் 10-ம் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும்.
6-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டத் தேர்தல் தேதி ஏப்ரல் 26-ம் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே-2ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறியதாவது:
‘‘மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை மதிக்கிறோம். ஆனால் அதேசமயம் திரிணமூல் காங்கிரஸ் வலிமையாக 24 பர்கானா மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமிஷ் ஷாவின் வசதிக்காக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதா. இதன் பின்னணி என்ன?’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT