Published : 25 Feb 2021 02:57 PM
Last Updated : 25 Feb 2021 02:57 PM

திடீரென அதிகரிக்கும் கரோனா; 3 முக்கிய காரணிகள்: அதிகாரிகள் எச்சரிக்கை

கோப்புப் படம்

மும்பை

மகாராஷ்ராவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதற்கு 3 முக்கிய காரணிகள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு பிப்ரவரி 9-ம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2489 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் திடீரென கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்த பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரிப்பதற்கு வேறுபல காரணிகளும் உள்ளன. வைரஸை பொறுத்தவரை புறச்சூழலை பொறுத்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுதில் மாறுபாடு காட்டும். அது இதற்கும் பொருந்தும். காலநிலை, மாசு, வீடுகளின் கட்டமைப்பு ஆகிய மூன்று காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கும் அல்லது குறைவதற்கும் இந்த மூன்று காரணிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. மகாராஷ்டிராவில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம் என நம்புகிறோம். மேலும் ரைவஸின் மாறுபாடு குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x