Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

ஏழுமலையானுக்கு தங்க சங்கு, சக்கரம் காணிக்கை வழங்கிய தமிழக பக்தர்

திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க சங்கு மற்றும் தங்க சக்கரத்தை காணிக்கையாக வழங்கும் தங்கதுரை.

திருமலை

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் பல விதமாக தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேனியை சேர்ந்த தங்கதுரை என்ற பக்தர், தனது குடும்பத்தாருடன் நேற்று சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் அவர் 3.5 கிலோ எடையுள்ள ரூ.2 கோடி மதிப்பிலான தங்க சங்கு, தங்க சக்கரத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார். இதனை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் தங்கதுரை கூறும்போது, ‘‘எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தொற்று குணமடைந்ததும் தரிசனத்திற்கு வருவதாக வேண்டிக் கொண்டேன். அதன்படி கரோனா குணமானது. 50 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறேன். அவர் அருளால் நான் நன்றாக உள்ளேன். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் தற்போது சுவாமிக்கு காணிக்கை வழங்கினேன்’’ என்றார்.

இதற்கு முன்பும் ஏழுமலையான் சுவாமிக்கு வைர ஆபரணம், தங்க அஸ்தம், ஒட்டியாணம் போன்றவற்றை தங்கதுரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x