Published : 24 Feb 2021 01:53 PM
Last Updated : 24 Feb 2021 01:53 PM
பெண் சக்திக்கு அதிகாரமளித்தவர் ஜெயலலிதா என்று அவரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 24-ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அதிமுக சார்பில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடங்கி வைக்கப்பட்டன. முதல்வர் பழனிசாமி தனது இல்லத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் புடைசூழ கட்சியின் தலைமை அலுவலகத்தில், முதல்வர், துணை முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது ஆளுயர உருவ மெழுகுச்சிலை திறந்து வைக்கப்பட்டது. அருங்காட்சியகமும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி, ஜெயலலிதா பிறந்த நாளன்று அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஜெயலலிதாவை அவரின் பிறந்த தினத்தில் நினைவுகூர்கிறேன். அவர் மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காகப் போற்றப்படுகிறார்.
நம்முடைய பெண்களின் சக்தியை முன்னேற்றி, அதிகாரம் அளிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகளையும் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார். அவருடனான என்னுடைய உரையாடல்களை எப்போதும் அன்புடன் நினைவில் வைத்திருப்பேன்'' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT