Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் ஹீரநாகவள்ளி கிராமத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணியளவில் வெடித்தது.
இந்த விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 3 பேர் உட்பட 6 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். காயமடைந்த 12 பேர் சிக்கபள்ளாப்பூர் அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சுரங்கத் துறை அமைச்சர் முருகேஷ் நிராணி, சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தோரை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர், சுரங்கத்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி கூறுகையில், "இந்த விபத்து குறித்து விரைவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர்எடியூரப்பா ஆகியோர் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT