Published : 20 Feb 2021 05:55 PM
Last Updated : 20 Feb 2021 05:55 PM
கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்திஸ்கர், மத்திய பிரதேசத்தில் தினசரி கரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.43 லட்சமாக (1,43,127) பதிவாகியுள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.30 சதவீதமாகும்.
கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்திஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அன்றாட பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 75.87 சதவீதத்தினர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை மட்டுமே சேர்ந்தவர்கள்.
நாட்டில் இதுவரை 21 கோடிக்கும் அதிகமான (21,02,61,480) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிப்ரவரி 20, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 3,50,283 பேர், புதுச்சேரியில் 9,126 பேர் உட்பட, நாடு முழுவதும் 1,07,15,204 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
2,22,313 முகாம்களில் 63,28,479 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 8,47,161 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 35,39,564 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 35-ஆம் நாளில் (பிப்ரவரி 20, 2021) 10,851 முகாம்களில் 5,27,197 பயனாளிகளுக்கு (2,90,935 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 2,36,262 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,67,741 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.27 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,307 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,112 பேரும், கேரளாவில் 4,505 பேரும், தமிழ்நாட்டில் 448 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 101 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT