Published : 18 Feb 2021 07:09 PM
Last Updated : 18 Feb 2021 07:09 PM
இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்தது. கோவிட் தடுப்பூசி போடுவதில் அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
2021 பிப்வரி 18 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்தது. பயனாளிகளுக்கு 94,22,228 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இவர்களில் 61,96,641 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள். 3,69,167 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள். 28,56, 420 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்கள்.
33 ஆம் நாளான இன்று 4,22,998 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, இன்று 1.06 கோடி (1,06,56,845). குணமடைந்தோர் எண்ணிக்கை 97.32 சதவீதம்.
இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்தது. கோவிட் தடுப்பூசி போடுவதில் அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
நாட்டில் தற்போது கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,37,342. மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 11,987 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 101 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக கேரளாவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT