Last Updated : 21 Nov, 2015 10:08 AM

 

Published : 21 Nov 2015 10:08 AM
Last Updated : 21 Nov 2015 10:08 AM

நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை ஒலிபரப்பாத சமுதாய வானொலிகள்: நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை ஒலிபரப்பாத சமுதாய வானொலிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

இதுவரை பிரதமராக இருந்தவர் கள் செய்திராத முயற்சியாக, ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் வானொலியில் பிரதமர் மோடி உரையாற்றி வரு கிறார். பொதுமக்கள் அனுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் அளிக்கும் பதில், நாடு முழுவதும் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படுகிறது. இதை சமுதாய வானொலிகளும் ஒலிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் செயல்படும் சமுதாய வானொலிகளில் சுமார் 30 வானொலிகள் பிரதமரின் உரையை ஒலிபரப்புவதில்லை என மத்திய அரசுக்கு புகார் வந்துள் ளது. மேலும் இந்த வானொலிகள் சமூகத்துக்கு எதிரான நிகழ்ச்சி களை ஒலிபரப்பி வருவதாகவும் அந்தப் புகார்களில் கூறப்பட்டுள் ளது. எனவே குறிப்பிட்ட 30 சமூக வானொலிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தகவல் ஒலிபரப்புத் துறை அதி காரி ஒருவர் கூறும்போது, “இந்த 30 சமூக வானொலிகள் சமுதாயத் துக்கு எதிரானவற்றை தங்கள் நிகழ்ச்சிகளில் ஒலிபரப்புவதாக எங் களுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இவர்களில் சிலர் ஆபாச பாடல்கள் மற்றும் கொச்சையான வார்த்தைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து பல முறை அறிவுறுத்தியும் இவர்கள் பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை ஒலிபரப்பவில்லை. இந்தப் புகார் கள் அமைச்சகங்களுக்கு இடை யிலான குழுக்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அவர்களின் பரிந் துரையின் அடிப்படையில் இந்த வானொலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பெரும்பாலும் பொதுநல அமைப்புகளால் நடத்தப்படும் சமுதாய வானொலிகள் நாடு முழுவதும் உள்ளன. குறைந்த அலைவரிசையில் ஒலிபரப்பப் படும் இவை, சுமார் 15 கி.மீ. சுற்றளவுக்கு மட்டுமே கேட்கும். இந்த வானொலிகள் அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சி களை தாங்களே முடிவு செய்ய லாம். ஆனால் செய்தி ஒலிபரப்ப இவற்றுக்கு அனுமதியில்லை.

இந்நிலையில் உ.பி.யின் சமுதாய வானொலிகள் தங்கள் மீதான புகார்கள் குறித்து ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘பேட்டி பச்சாவ் (மகளை காத்திடுங்கள்), ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) போன்ற திட்டங்கள் மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பும்படி எங்களை அரசு அவ்வப்போது கேட்டுக்கொள் கிறது. இது எங்கள் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது. மேலும் வானொலி நேயர்களை எங்கள் நிகழ்ச்சிகளில் பேச வைக்கும்போது அவர் அரசுக்கு அல்லது சமுதாயத்துக்கு எதிரான தனிப்பட்ட கருத்துகளை கூறும் போது எப்படி தடுக்க முடியும்?” என கேள்வி எழுப்புகின்றனர்.

நாடு முழுவதிலும் உள்ள சமுதாய வானொலிகளுக்கு அரசு அளிக்க வேண்டிய தொழில்நுட்பம் உட்பட பல்வேறு உதவிகள் சரியாக கிடைப்பதில்லை எனவும், மேம்பாட்டுக்காக மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்த ரூ. 100 கோடி செலவிடப்படவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

இத்துடன், அரசு வெளியிடும் விளம்பரங்களுக்கான தொகையும் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை எனவும் இதனால் நிதிப் பிரச்சினை காரணமாகவும் சுமார் 20 சதவீத சமுதாய வானொலிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x