Published : 21 Nov 2015 10:13 AM
Last Updated : 21 Nov 2015 10:13 AM
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி உட்பட முக்கிய குற்றவாளிகள் 2 பேரின் நீதிமன்ற காவல் டிசம்பர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த கொலை வழக்கில் கைதான இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி மீது சிபிஐ அதிகாரிகள் கொலை மற்றும் சதிச் செயல் புரிந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷீனா போரா கொலை செய்யப்பட்டார். இவரது உடல் பாகங்கள் ராய்கட் வனப்பகுதியில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஷீனாவின் தாயும், ஸ்டார் இந்தியா டிவி முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவியுமான இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய், 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் புதிய திருப்பமாக இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியையும் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன் தினம் கைது செய்தனர். குற்ற வாளிக்கு பாதுகாப்பு அளித்தது மற்றும் முரண்பாடான வாக்கு மூலம் அளித்தது ஆகிய காரணங் களால் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் மீது கொலை மற்றும் சதி செயல் புரிந்த தாக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
பீட்டர் முகர்ஜியின் மகனும், ஷீனா போராவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தவருமான ராகுல் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரி கள் நேற்று 12 மணி நேரம் விசா ரணை நடத்தினர். அதன் பிறகே, பீட்டர் முகர்ஜி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் முக்கிய குற்ற வாளிகளான இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய், 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோரின் நீதி மன்ற காவல் நேற்றுடன் முடிவடைந் ததை அடுத்து, இந்திராணியை தவிர்த்து மற்றவர்கள் மும்பையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கொலை வழக்கு தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தவிருப்பதால் அவர்களது நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்று அவர்களது நீதிமன்ற காவல் வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதே போல் இரு தினங்களுக்கு முன் கைதான இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனு மதி அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT