Published : 13 Feb 2021 12:51 PM
Last Updated : 13 Feb 2021 12:51 PM
நாடு முழுவதும் 411 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஜல் சக்தித்துறை இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா மக்களவையில் அளித்த தகவலில் கூறியதாவது:
* தேசிய அணைகள் பதிவேட்டின் படி, நாட்டில் தற்போது 5,334 அணைகள் உள்ளன. 411 அணைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.
* உலக வங்கி நிதியுதவியுடன் 7 மாநிலங்களில் உள்ள 223 அணைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
* அணைகளில் தேங்கியுள்ள வண்டல்கள் பற்றி ஹைட்ரோ கிராபிக் கணக்கெடுப்பு மற்றும் தொலை உணர்வு தொழில்நுட்பம் மூலம் மத்திய நீர் ஆணையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
* மத்திய அரசின் பல துறைகள் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.
நேரு யுவ கேந்திரா சங்கேதனுடன் இணைந்து கடந்தாண்டு டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் 623 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
* நீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்காக, மக்கள் பங்களிப்பு மூலம் பல நடவடிக்கைகளை ஜல் சக்தி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
அடல் பூஜல், ஜல் சக்தி, தேசிய நீர் மோலண்மை, தேசிய பார்வை, பிரதமரின் கிரிஷி சின்சாயீ போன்ற பல திட்டங்களை ஜல் சக்தி அமைச்சகம் செயல்படுத்துகிறது.
* நீர் விநியோகத்தை அளவிடவும், கண்காணிக்கவும், குறைந்த செலவில் புதுமையான தொழில்நுட்பத்தை கண்டறிவதற்காக தேசிய ஜல் ஜீவன் திட்டம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து ஐசிடி கிராண்ட் சவால் போட்டியை நடத்தியது.
இதில் 10 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாதிரி கருவிகளை உருவாக்குவதற்காக தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT