Published : 09 Feb 2021 11:03 AM
Last Updated : 09 Feb 2021 11:03 AM
கோவிட் தொற்று காலத்தில், கங்கை நீரில், கன உலோக மாசு அளவு, குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கோவிட் தொற்று காலத்தில் கங்கை நதி நீரில் மாசு அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதில் கன உலோக மாசு அளவு குறைந்தது கண்டறியப்பட்டது. தொழிற்சாலை கழிவு நீர் கங்கை நீரில் நேரடியாக கலப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கன உலோக மாசு அளவு குறைந்தது ஆய்வில் தெரியவந்தது.
கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர், கரோனா தொற்று காலத்தில் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் தினந்தோறும் கங்கை நீரின் புவி வேதியியல் அளவீடுகளை ஆய்வு செய்தனர். 51 நாட்கள் முடக்கத்தில், தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பு குறைந்ததால், கங்கை நீரின் கலந்துள்ள கன உலோக அடர்வும் 50 சதவீதம் குறைந்திருந்தது தெரியவந்தது.
ஆனால், வேளாண் செயல்பாடுகள் மற்றும் வீட்டு கழிவு நீர் கலப்பால், கங்கை நீரில் உள்ள நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் அளவு ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய அளவிலான முடக்கம், வீட்டு உபயோக கழிவு நீர் கலப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT