Published : 08 Feb 2021 02:04 PM
Last Updated : 08 Feb 2021 02:04 PM
கோவிட்-19 தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.
பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு சர்வதேச சாதனையை படைத்துள்ளது.
அதிக பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.
அமெரிக்கா, இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியா இந்த இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் 3 கோடியே 68.2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 1 கோடியே 1. 48 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
12 மாநிலங்களில் தலா இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 6,73,542 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 1,66,408 & புதுச்சேரியில் 3,532 பேர் உட்பட இதுவரை 57.75 லட்சத்திற்கும் அதிகமான (57,75,322) பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
53,04,546 சுகாதார பணியாளர்களுக்கும், 4,70,776 முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 8,875 முகாம்களில் 3,58,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை 1,15,178 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அன்றாடம் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் பயனாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் 80 க்கும் குறைவான உயிரிழப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன. இது கடந்த ஒன்பது மாதங்களில் ஏற்பட்ட தினசரி உயிரிழப்புகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும்.
நாட்டில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.48 லட்சமாகக் (1,48,766) குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.37 சதவீதமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT