Published : 07 Feb 2021 07:27 PM
Last Updated : 07 Feb 2021 07:27 PM
நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் வலுவான நிலைப்பாடு எடுக்கும் ராகுல் காந்தி மட்டுமே காங்கிரஸ் தலைவராக முடியும் என்று சத்தீஸ்கர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ராகுல் காந்தியை தலைவராக பொறுப்பேற்கக் கோரி ஒரு தீர்மானத்தை டெல்லி காங்கிரஸ் நிறைவேற்றிய நிலையில், வயநாடு எம்.பி.யை மீண்டும் கட்சித் தலைவராக நியமிக்க பூபேஷ் பாகேல் முன்வைத்த தீர்மானத்தை, சத்தீஸ்கர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (சிபிசிசி) சனிக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது.
சத்தீஸ்கர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்தில் ''அனைத்து காங்கிரஸ் நபர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக உறுதியுடன் நிற்கிறார்கள், அவருடைய தலைமையின் கீழ், காங்கிரஸ் அமைப்பு தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அவரது தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் அவர்கள் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ, செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் த்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியதாவது:
அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் முக்கியமான பிரச்சினைகளில் வலுவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவர் ராகுல் காந்தி தான்.
ராகுல் காந்தி கட்சி மற்றும் அனைவரின் நம்பிக்கையையும் பெற்று வருகிறார், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். ராகுல் காந்தியைத் தவிர, நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் சுற்றுப்பயணம் செய்யக்கூடிய தலைவர்கள் யார் இருக்கிறார்கள். நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களால் அங்கீகரிக்கப்பட்டவர் யார்?
ராகுல் காந்தி அனைத்து விஷயங்களிலும் பேசுகிறார், அது பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி, அல்லது கோவிட் -19 என அவர் தனது நிலைப்பாட்டை மிகச்சரியாகவே தெளிவாக முன்வைக்கிறார்.
மேலும் அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக மிகத் தெளிவான வலுவான நிலைப்பாட்டை எடுத்தார். நாட்டின் முக்கியமான பிரச்சினைகளைப் பொறுத்தவரை ஒரு தெளிவான நிலைப்பாட்டில் நின்று வலுவாக செயல்படும் ஒரே தலைவர் ராகுல் காந்தி. அதுமட்டுமின்றி அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எல்லாம் அவர் அடிபணிந்துவிடாமல் தனது கருத்துக்களை எந்தவித தயக்கமும் இன்றி உறுதியாக முன்வைக்கிறார்.
இவ்வாறு பூபேஷ் பாகேல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT