Last Updated : 06 Feb, 2021 06:31 PM

 

Published : 06 Feb 2021 06:31 PM
Last Updated : 06 Feb 2021 06:31 PM

லஷ்கர்-இ-முஸ்தபா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹிதயதுல்லா மாலிக் கைது  

ஜம்முவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் பாட்டீல் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி | படம்: ஏஎன்ஐ

ஜம்மு

.ஜம்மு மற்றும் அனந்த்நாக் போலீஸ் படைகளின் கூட்டு நடவடிக்கையால் லஷ்கர்-இ-முஸ்தபா பயங்கரவாத அமைப்பின் தலைவர் மாலிக் பிடிபட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜம்முவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் பாட்டீல் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜம்மு மற்றும் அனந்த்நாக் போலீஸ் படைகளின் கூட்டு நடவடிக்கையால் லஷ்கர்-இ-முஸ்தபா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹிதாயதுல்லா மாலிக் என்பவரை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜம்முவில் உள்ள குஞ்ச்வானி அருகே அவர் பிடிபட்டார். அவர் வசம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன

லஷ்கர்-இ-முஸ்தபா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர் ஹிதாயதுல்லா மாலிக். இந்த அமைப்பு, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக்குழுவின் கிளை அமைப்பாகும். காஷ்மீர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரகசியமாக இயங்கி வரும் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

.இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய ரகசிய உளவாளி ஒருவர் கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்ல இருந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x