Published : 06 Feb 2021 04:46 PM
Last Updated : 06 Feb 2021 04:46 PM
நாட்டில் இதுவரை 54 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இந்தியா தயாரித்துள்ள கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்ட்டின் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அவை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் ஜனவரி 16 முதல் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 54,16,849 பயனாளிகள் தடுப்பூசி பெற்றுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 6,73,542 பயனாளிகள் தடுப்பூசி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் 4,34,943 பேருக்கும், ராஜஸ்தானில் 4,14,422 பேருக்கும், கர்நாடகாவில் 3,60,592 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவிட் 19 தடுப்பூசியில் 21 நாட்களில் 50 லட்சத்தை எட்டிய நாடு இந்தியா தான். கடந்த 24 மணி நேரத்தில், 10,502 அமர்வுகளில் 4,57,404 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை 54,16,849 பயனாளிகள் தடுப்பூசி பெற்றுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 6,73,542 பயனாளிகள் தடுப்பூசி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் 4,34,943 பேருக்கும், ராஜஸ்தானில் 4,14,422 பேருக்கும், கர்நாடகாவில் 3,60,592 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மொத்தம் 1,06,303 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3,01,537 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 1,55,867 முன்னணி பணியாளர்களும் இடம்பெற்றனர்.
மொத்தம் 20 கோடி கோவிட் பரிசோதனைகள்
கரோனா வைரஸ் பாதிப்புகளைக் கண்டறிவதற்காக இதுவரை மொத்தம் 20 கோடி (20,06,72,589) சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
புதிய பாதிப்புகளில் சுமார் 83.3 சதவீதம் மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகாவின் ஆறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளன. மொத்த கரோனா பாதிப்புகள் 1,08,14,304 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,54,918 ஆகவும் அதிகரித்துள்ளது.
இன்று காலை புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி நாட்டில் 24 மணி நேர இடைவெளியில் மொத்தம் 95 இறப்புகள் பதிவாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT