Last Updated : 25 Nov, 2015 09:32 AM

 

Published : 25 Nov 2015 09:32 AM
Last Updated : 25 Nov 2015 09:32 AM

அமைச்சர் பொறுப்பேற்றுள்ள மகன்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க லாலு முயற்சி

பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது ‘அமைச்சர் மகன்களை’ தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத் திருக்க முயற்சிப்பதாக கூறப்படு கிறது. இரு மகன்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் குடிபுகாமல் லாலுவுடனே வசிக்க முடிவு செய்துள்ளனர்.

பிஹார் முதல்வராக இருந்த லாலு, கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற போது, முதல்வர் பதவியில் தனது மனைவி ராப்ரி தேவியை அமர்த்தினார். இத்துடன் சிறையில் இருந்தபடியே அரசின் முழு அதிகாரங்களையும் தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்தார். இந்த வகையில் தற்போது பிஹார் அமைச்சர்களாக பதவியேற் றுள்ள தனது இரு மகன்களின் அதிகாரத்தையும் தனது கட்டுப் பாட்டில் வைக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

பிஹாரில் லாலுவின் இளைய மகன் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் (26) துணை முதல்வராகவும், மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் (27) அமைச்சராகவும் பதவி ஏற்றுள் ளனர். மிகக்குறைந்த அரசியல் அனுபவம் கொண்ட இவர்கள், முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலை யில் அனுபவம் இன்மையால் இவர் களின் செயல்பாடுகளில் பிரச் சினை வந்து விடக்கூடாது என அஞ்சுகிறார் லாலு. இதன் காரண மாக அவர்களை தன்னுடனேயே வைத்திருந்து பயிற்சி அளிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ராஷ்ட்ரிய ஜனதா தள வட்டாரங்கள் கூறும்போது, “மகன்கள் அமைச் சர்களாகி விட்டாலும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை சமாளிக்க இரு வருக்கும் வயது போதாது எனக் கருதுகிறார் லாலுஜி. தனது குடும்பம் மற்றும் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வாய்ப்பு எவருக்கும் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக இவர்களை லாலுஜி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் தவறில் லை” என்று தெரிவித்தனர்.

பிஹாரில் 2005-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் தோல்வியுற்ற ராப்ரி தேவி, முதல்வர் பங்களாவில் இருந்து வெளியேறினார். பாட்னா வின் சர்குலர் சாலை, எண் 10-ல் உள்ள எம்எல்ஏ பங்களாவில் அவர் குடியேறினார். இதில் ராப்ரியுடன், கணவர் லாலு உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் துணை முதல் வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வீ, தனக்கு ஒதுக்கப் படும் அரசு பங்களாவில் குடியேறப்போவ தில்லை என்று கூறியுள்ளார். அந்த பங்களா முழுவதையும் தனது அலுவலகமாக மாற்றப் போவதாகவும், தனது தாயார் ராப்ரியின் அரசு இல்லத்தில் தொடர்ந்து வசிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் தனியாகப் பேசுவதை தவிர்க்கும்படியும் லாலு தனது மகன்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தேஜஸ்வீ, தேஜ்பிரதாப் ஆகிய இருவரும் பதவியேற்ற பிறகு அவர்களை சூழ்ந்திருந்த செய்தியாளர்கள் பேட்டிக்காக தனியே அழைத்தனர். இதற்கு சிரித்த முகத்துடன் கடுமை காட்டிய லாலு, “எதுவாக இருந்தாலும் என் கண் முன்னே கேளுங்கள். அவர்கள் எங்கும் தனியாக வர மாட்டார்கள்” என்று கூறிவிட்டார்.

பிஹாரின் துணை முதல்வரான தேஜஸ்வீயிடம் கட்டிடங்கள் மற்றும் சாலை அமைத்தல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சர் மற்றும் எம்எல்ஏக் களுக்கு இவர்தான் அரசு பங்களா மற்றும் வீடுகளை ஒதுக்கவேண்டும். இத்துடன் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையும் தேஜஸ்வீக்கு அளித் துள்ளார் முதல்வர் நிதிஷ்குமார். லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாபுக்கு சுகாதாரம், பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x