Last Updated : 04 Feb, 2021 11:22 AM

1  

Published : 04 Feb 2021 11:22 AM
Last Updated : 04 Feb 2021 11:22 AM

டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தை சந்திக்கிறார் பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி.

புதுடெல்லி

குடியரசு தின வன்முறையில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியை போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடுக்க முயன்றனர்.

போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அப்போது மத்திய டெல்லியின் மிண்டோ சாலையில் ஒரு டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உ.பியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. உயிரிழந்த நபர் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவரது இறப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் லாலன் குமார் கூறுகையில், ''காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை ராம்பூருக்கு செல்கிறார். குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது பலியான நவரீத் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்குவார்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x