Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM
நாட்டில் மிகவும் இளம் வயதில் விமானி ஆன பெண் என்ற பெருமையை காஷ்மீரைச் சேர்ந்த 25 வயது ஆயிஷா அஜீஸ் பெற்றுள்ளார்.
ஆயிஷாவின் தாய், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர். தந்தை மும்பையைச் சேர்ந்தவர். 2011-ம் ஆண்டில் ஆயிஷா தனது 15-வது வயதில் 10-ம் வகுப்பு படிப்புக்கு பிறகு மாணவர் விமானிக்கான உரிமம் பெற்றார். இதன் மூலம் நாட்டின் மிக இளம் வயது மாணவர் விமானி என்ற பெருமை பெற்றார். அடுத்த ஆண்டில் ரஷ்யாவின் சோகோல் விமான தளத்தில் மிக்-29 ரக ஜெட் விமானத்தில் பறப்பதற்கான பயிற்சி பெற்றார்.மும்பையில் உள்ள பாம்பே ஃப்ளையிங் கிளப்பில் ஏவியேஷன் பட்டப்படிப்பு முடித்த ஆயிஷா, 2017-ல் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற்றார்.
இதுகுறித்து ஆயிஷா கூறும்போது, “காஷ்மீர் பெண்கள் கடந்த சில ஆண்டுகளில் மகத்தான முன்னேற்றம் அடைந்துள்ளனர். பல்வேறு மனிதர்களை சந்திக்க முடியும் என்பதால் நான் விமானி ஆக விரும்பினேன். இது, காலை 9 மணிக்கு சென்று மாலை 5 மணிக்கு திரும்புவது போன்ற சாதாரண பணி அல்ல. மிகவும் சவாலான பணி. புதிய இடங்களையும் பல்வேறு வகை வானிலையையும் புதிய நபர்களையும் சந்திக்க நாம் தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும். சுமார் 200 பயணிகளை அழைத்துச் செல்லும் பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT