Published : 06 Nov 2015 08:44 AM
Last Updated : 06 Nov 2015 08:44 AM
தெலங்கானா மாநிலம் வாரங்கல் தொகுதி முன்னாள் எம்.பி. ராஜய்யா வின் மருமகள், 3 பேரன்கள் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்தது தொடர்பாக 2-வது நாளாக அவரிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
தெலங்கானா மாநிலம், வாரங் கல் நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடை பெற உள்ளது. இதில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்.பி ராஜய்யா வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றபோது, நேற்று முன் தினம் காலை, இவரது மருமகள் சாரிகா மற்றும் 3 பேரன்கள் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜய்யா, அவரது மனைவி மாதவி மற்றும் மகன் அணில் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மூவரிடமும் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ராஜய்யாவின் குடும்பத்தினர், மருமகளை கொடுமைபடுத்தி யிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சாரிகாவின் கணவர் அணில் குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் விசாரணை யில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
இந்நிலையில் நேற்று பிரேத பரிசோதனைகள் முடிந்து 4 பேரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களது இறுதி சடங்குகள் நேற்று மாலை நடைபெற்றது.
இதனிடையே ராஜய்யாவிற்கு பதிலாக சர்வே சத்யநாராயணாவை காங்கிரஸ் மேலிடம் வேட்பாளராக அறிவித்தது. இவர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT