Published : 03 Feb 2021 08:40 AM
Last Updated : 03 Feb 2021 08:40 AM

திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டாரம்: இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை சென்னை மற்றும் திருச்சூர் வட்டாரத்தை பிரித்து திருச்சி வட்டாரத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கூறினார்.

மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் கூறியதாவது:

கலை மற்றும் கலாச்சாரத்தை பல திட்டங்கள் மூலம் பாதுகாத்து வளர்ப்பதுதான் கலாச்சாரத் துறையின் நோக்கம். இதற்காக இத்துறையின் கீழ் 2 அலுவலகங்கள், 6 துணை அலுவலகங்கள், 34 தன்னாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் பல திட்டங்கள் நேரடியாக செயல்படுத்தப்படுகின்றன.

தொல்பொருள், அருங்காட்சியகங்கள், காப்பகங்கள், மானுடவியல், பொது நூலகங்கள், புத்த மற்றும் திபெத்திய நிறுவனங்கள், நூற்றாண்டு விழாக்கள், ஆண்டுவிழாக்கள், சர்வதேச கலாச்சார உறவுகள், காந்தி பாரம்பரிய இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தற்போதுள்ள வட்டாரங்களை பிரித்து, 6 புதிய வட்டாரங்களை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் வதோதரா வட்டாரத்தை பிரித்து ராஜ்கோட் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் போபால் வட்டாரத்தை பிரித்து ஜபல்பூர் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் திருச்சூர் வட்டாரத்தை பிரித்து திருச்சி வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் ஆக்ரா வட்டாரத்தை பிரித்து மீரட் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் லக்னோ வட்டாரத்தை பிரித்து ஜான்சி வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் கொல்கத்தா வட்டாரத்தை பிரித்து ராய்கன்ச் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x