Published : 03 Feb 2021 07:53 AM
Last Updated : 03 Feb 2021 07:53 AM
கரோனா வைரஸ் தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளவரசி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 21-ம் தேதி சசிகலாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்
பட்ட நிலையில் அவருடன் தங்கியிருந்த இளவரசிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கும் அறிகுறிகள் அற்ற கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இளவரசி கடந்த 23-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு
மதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக மருத்துவர்கள் கரோனா தொற்றுக்கான சிகிச்சைகளை வழங்கியதால் அவர் பூரண குணமடைந்தார். இதையடுத்து இளவரசி நேற்று மாலை 4 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இளவரசியின் தண்டனைக் காலம் இன்னும் நிறைவடையாததால், போலீஸார் அவரை தனி ஆம்புலன்ஸில் பாதுகாப்பாக பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்துச் சென்றனர். இளவரசி 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வலியுறுத்தப்பட்டிருப்பதால் சிறை அதிகாரிகள் அவரை தனி அறையில் அடைத்துள்ளனர். இதனிடையே இளவரசியின் தண்டனைக் காலம் பிப்ரவரி 5-ம் தேதியுடன் நிறைவடைவதால், அவர் அன்று காலை விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT