Published : 01 Feb 2021 07:21 PM
Last Updated : 01 Feb 2021 07:21 PM
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது மற்றும் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்த பார்வை:
1. சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 137 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.2.23 லட்சமாக உயர்வு.
2. கரோனா தடுப்பூசி வழங்குவதற்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
3. இந்தியாவில் 2 கரோனா தடுப்பூசிகள் உள்ளன, கூடுதல் 2 தடுப்பூசிகள் வர உள்ளன.
4. 2021-22ஆம் நிதியாண்டில் முதலீட்டுச் செலவு ரூ.4.39 லட்சம் (நடப்பு நிதியாண்டு) கோடியிலிருந்து ரூ.5.54 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
5. நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்டில் 3.5 சதவீதம் மதிப்பிடப்பட்ட நிலையில் நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதமாக அதிகரிப்பு.
6. 2021-22ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 6.8 சதவீதமாக நிர்ணயம்.
7. 2025-26ஆம் நிதியாண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழாகக் குறைக்க திட்டம்.
8. வரிவிதிப்பு முறை: 75 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ஐடி ரிட்டர்ன் தாக்கல் கட்டாயமில்லை, வங்கிகளே டிடிஎஸ் பிடிக்கும்.
9. வருமானவரி ரிட்டர்ன் செலுத்துவோர் எண்ணிக்கை 2020ல் 6.48 கோடியாக அதிகரிப்பு. 2014-ல் 3.31 கோடியாக இருந்தது.
10. 2021-22ஆம் நிதியாண்டில் உருவாக்கப்படும் தற்சார்பு சுகாதாரத் திட்டத்துக்காக ரூ.64,180 கோடி ஒதுக்கீடு.
11. வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இறக்குமதி தங்கம், வெள்ளி மீது 2.5 சதவீதம் வரி, ஆப்பிள்கள் மீது 35 சதவீதம் வரி.
12. இறக்குமதி செய்யப்படும் கபுலி சென்னா மீது 30 சதவீதம் வரி, பருப்பு மீது 10 சதவீதம் வரி, பெங்கால் பருப்பு மீது 20 சதவீதம் வரி, பருத்தி மீது 5 சதவீதம் வரி வேளாண் கட்டமைப்புக்காக விதிப்பு.
13. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 வரி, டீசல் மீது ரூ.4 வரி விதிப்பு.
14. புதிய வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு வரி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
15. அடுத்த ஓராண்டுக்கு வீட்டுக் கடனில் ரூ.1.50 லட்சம் வரி கழிவு நீட்டிப்பு.
16. டிஜிட்டல் முறையில் உற்றுமுதல் செய்யும் நிறுவனங்கள் வரி தணிக்கை விலக்கு ரூ.10 கோடியாக அதிகரிப்பு
17. 400 பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.
18. சோலார் கருவிகள், ஆட்டோமொபைல் பாகங்கள் மீது சுங்கவரி விதிப்பு
19. காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதமாக அனுமதி. முன்பு 49 சதவீதமாக இருந்தது.
20. அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அடுத்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடிவு.
21. வங்கிகளுக்கு மறு முதலீட்டுக்கு அடுத்த நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி.
22. கட்டமைப்புக்கான நிதி திரட்டுவதற்காக மேம்பாட்டு நிதிக் கழகம் ரூ.20 ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும்.
23. வர்த்தகரீதியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால், அதற்கு தகுதிச்சான்று, தனிநபர் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையாக இருந்தால் அதற்கு தகுதிச்சான்று.
24. டிஜிட்டல் முறையில் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.3,726 கோடி ஒதுக்கீடு.
25. அசாம், மேற்கு வங்க தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் நலனுக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு
26. 2021-22ஆம் ஆண்டில் சுகாதாரத் துறைக்கு மட்டும் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 846 கோடி ஒதுக்கீடு. இது நடப்பு நிதியாண்டில் ஒதுக்கிய தொகையான ரூ.94,542 கோடியை விட 137 சதவீதம் அதிகம்.
27. அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.2.87 லட்சம் ஒதுக்கீடு.
28. நகர்ப்புற ஸ்வச் பாரத் திட்டத்துக்காக (2.0) ரூ.1.41,678 கோடி ஒதுக்கீடு.
29. 10 லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கும் 42 பெருநகரங்களில் காற்று மாசைக் குறைக்க ரூ.2,217 கோடி ஒதுக்கீடு.
30. 13 துறைகளில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி.
31. நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து துறைக்கு ரூ.1,18,101 லட்சம் கோடி.
32. ரயில்வே துறைக்கு ரூ.1,10,055 கோடி ஒதுக்கீடு.
33. சோலார் மின்சக்திக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி முதலீடு.
34. கிராமப்புற அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.40 ஆயிரம் கோடி.
35. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றத்துக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கீடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT