Published : 01 Feb 2021 04:25 PM
Last Updated : 01 Feb 2021 04:25 PM
பெரிய சிந்தனைகளைக்கொண்ட சீர்திருத்தம் மிக்க ஒரு பட்ஜெட் என்று 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தொழிலதிபர்கள் பாராட்டியுள்ளனர்.
2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அறிவிப்புகளுக்கு தொழிலதிபர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பட்ஜெட் அறிவிப்புகள் வந்தவுடன் தங்கள் ட்விட்டரில் தொழிலதிபர்களின் எதிர்வினைகள் பின்வருமாறு:
வேதாந்தா ரிசோர்சஸ் நிர்வாகத் தலைவர் அனில் அகர்வால்: இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முதலீடு உட்பட பல பெரிய சிந்தனைகளைக் கொண்ட சீர்திருத்தம் மிக்க பட்ஜெட் 2021 ஐ வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்த பட்ஜெட் உள்கட்டமைப்பு மீதான உந்துதல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா: முன்னோடியில்லாத வகையில் பொருளாதார அழுத்தம் மிக்க ஒரு காலம் இது. இத்தகைய காலத்தில் பொருளாதாரத்தை புதுப்பிக்க போதுமான அளவு செலவழிக்க வேண்டும், இல்லையெனில் மகத்தான மனித துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும். எனவே இந்த வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது: இலக்கு வைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை நாம் மிகவும் தாராளமாக இருக்க வேண்டும். எனினும் பட்ஜெட் வரவேற்கப்படுகிறது.
ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா: கிரிக்கெட்டில் புஜாரா மற்றும் பந்த் இன்னிங்ஸின் ஒருங்கிணைப்பில் நிலைப்புத்தன்மையும் சுறுசுறுப்பும் இணைந்ததுபோன்றதை நினைவுபடுத்துகிறது இந்த பட்ஜெட். உள்கட்டமைப்பு, வணிகச் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களைப் பணமாக்குவதற்கான பெரிய முயற்சிகளில் வணிக எளிமை, (பங்குச்சந்தையில்) புதிய விலக்கு, காப்பீட்டு அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றின் பெரிய முயற்சிகளைக் கொண்டு வணிகத்தின் எளிமை ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியாவில் வென்றது. இப்போது புதிய உலகிலும் இந்தியாவுக்கு உயர்ந்த இடம்!
பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா: ஒட்டுமொத்தமாக, எதிர்மறையான அதிர்ச்சிகள் இல்லாத இந்த உறுதியான பட்ஜெட் ஒட்டுமொத்த உணர்வையும் தூண்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT