Published : 31 Jan 2021 05:21 PM
Last Updated : 31 Jan 2021 05:21 PM
2020-ல் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் வந்த 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகள், 1,500 கோடி ரூபாய் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கடலோர காவல்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கடல்சார் சட்ட அமலாக்க நிறுவனம் தனது 45 வது எழுச்சி தினம் பிப்ரவரி 1, 2021 அன்று கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி கடலோர காவல்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடல்சார் சட்ட அமலாக்க நிறுவனம் தனது 45 வது எழுச்சி தினம் பிப்ரவரி 1, 2021 அன்று கொண்டாடவுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோயால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும்கூட, தினமும் சுமார் 50 கப்பல்களையும் 12 விமானங்களையும் நிலைநிறுத்துவதன் மூலம், கடலோரக் காவல்படை இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (exclusive economic zone) 24x7 கண்காணிப்பை பராமரித்து வருகிறது.
இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் சுமார் 2 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவைக் கண்காணிப்பை பராமரிக்கும் பொறுப்பு கடலோரக் காவல் படைக்கு உள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னர் மீட்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 11 சூறாவகளிகளில் கடலோர காவல்படை தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன்மூலம் 40,000 மீனவர்களுடன் 6,000 க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் பாதுகாப்பான துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதை உறுதி செய்தது. கடலில் உயிர் மற்றும் சொத்து இழப்பைத் தவிர்த்துள்ளது.
கடலோரக் காவல்படையின் கடலில் தடுப்பு மற்றும் சேவையின் ஒருங்கிணைந்த விமான கண்காணிப்பு மிகவும் கண்காணிப்போடு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை கைப்பற்றியுள்ளது. சட்டவிரோதமாக இயங்கிவந்த 10 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மீன்பிடி படகுகளை அதன் 80 குற்றவாளிகளுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கடலோரக் காவல்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT