Published : 30 Jan 2021 12:56 PM
Last Updated : 30 Jan 2021 12:56 PM
2022ம் ஆண்டுக்குள், 10 சதவீத எத்தனால் கலந்து பெட்ரோல், 2025-ம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
வேளான் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியை குறைக்கவும், காற்று மாசுவை குறைக்கும் நோக்கில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் தேவையை நிறைவேற்ற, எத்தானல் வடிதிறைனை அதிகரிப்பதற்கான நிதியுதவி திட்டத்தையும் அரசு அறிவித்தது. கரும்பு, இந்திய உணவு கழகத்திடம் உள்ள அரிசி, சோளம் ஆகியவற்றிலிருந்து முதலாம் தலைமுறை எத்தனாலை உற்பத்தி செய்வதற்கான வடிசாலைகளை அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜனவரி 14ம் தேதி வெளியிட்டது.
இதில் தொழில்நிறுவனங்கள் அதிகளவில் பங்கேற்கவும், மாநில அரசுகளின் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் தலைமையில், கடந்த 27-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநில அரசுகள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் இத்திட்டத்தின் முழு விவரங்களை தெரிவித்தன. அப்போதுதான், மாநிலங்களில் உள்ள தொழில் முனைவோர்கள், சங்கங்கள், இத்திட்டத்தின் பயன்களை பெற முடியும்.
இந்த திட்டத்திற்கான வடி ஆலைகளை அமைப்பதற்கான நிலம், சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றை விரைவில் வழங்கும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டுதல் குழுவை, ஒவ்வொரு மாநிலமும் தலைமை செயலாளர் தலைமையில் அமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின், பயன்கள் குறித்து இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டது. நாட்டில் கூடுதலாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரை, எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும். இதன்மூலம் கிடைக்கும் வருவாய், கரும்பு விவசாயிகளின் நிலுவைதொகையை சரியான நேரத்தில் வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு உதவியாக இருக்கும்.
கூடுதலாக 135 லட்சம் டன் உணவு தானியங்களை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தும்போது, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும். வடிஆலைகளை அமைக்க, தொழில் முனைவோர்கள் செய்யும் முதலீடு மூலம் ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும். கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பின் மூலம், பெட்ரோலியத்துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடைய முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT