Published : 27 Jan 2021 04:10 PM
Last Updated : 27 Jan 2021 04:10 PM
மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய தகவல் மையத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான என்ஐசிஎஸ்ஐ தனது வெள்ளி விழாவை நாளை கொண்டாடுகிறது.
இதற்கு மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தலைமை வகிக்கிறார்.
இந்நிகழ்ச்சி நாளை காலை 11.30 மணிக்கு தொடங்கும். என்ஐசி சமூக ஊடக தளம் https://webcast.gov.in/nicsi -ல் இது நேரடியாக ஒளிபரப்பப்படும்.
தேஜஸ் என்ற - மெய்நிகர் நுண்ணறிவு கருவியையும் அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இது கொள்கை முடிவுகளுக்குத் தேவையான முக்கிய தகவல்களை பெற்றுத் தரும், அரசு சேவைகளின் திறனை மேம்படுத்தும். அரசு அமைப்புகளுக்கான இ-ஏல சேவைகளை 24 மணி நேரமும் அளிக்கும்.
எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றக் கூடிய இணையதளத்தில், இ-அலுவலக வசதி மூலம் ஊழியர்கள் தங்களுக்கு தேவையான விண்ணப்பங்களைப் பெற முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT