Last Updated : 24 Jan, 2021 07:52 PM

1  

Published : 24 Jan 2021 07:52 PM
Last Updated : 24 Jan 2021 07:52 PM

வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் விவசாயிகள் ஒன்றிணைந்துள்ளனர்: டெல்லி போராட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

புதுடெல்லி

கன்னியாமரி முதல் காஷ்மீர் வரை மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைந்துள்ளதாக, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய அரசிற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று தமிழக விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் ஒரு எல்லையான சிங்கூரில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் வந்திருந்தனர்.

சிங்கூரின் போராட்டத்தில் பி.ஆர் பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் இன்று போராட்டக்களத்தில் அவர்களோடு இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெற இருக்கின்ற நிலையில் அதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான டிராக்டர்கள் சிங்கூர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

அப்பேரணிக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ‘‘மத்திய அரசு வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற மறுப்பதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் என களங்கப்படுத்த முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பிரதமர் மோடி அரசின் விவசாய விரோத கொள்கைகளை எதிர்த்து குமரி முதல் காஷ்மீர் வரை ஒன்றுப் பட்டுள்ளோம் என எச்சரிக்கிறோம்.. தமிழ்நாட்டிலும் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கிறது

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சிகளையும் எதிர்ப்பதற்கு தயங்கமாட்டோம். விவசாய விரோத சட்டத்திற்கு எதிராக தமிழக விவசாயிகள் வாக்களிக்க உள்ளார்கள்.

நிச்சயமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விவசாய விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். வரும் குடியரசு தினத்தன்று நடைபெற இருக்கிற டிராக்டர் பேரணி தமிழ்நாட்டிலும் விவசாயிகள் சார்பாக நடத்தப்படவுள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க உள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.

டெல்லியில் நிலவும் கடும் குளிரில் தமிழகத்தில் இருந்த வந்த விவசாயிகள் ஒன்றிணைப்புக் குழுவில், அதன் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருன், முன்னணி நிர்வாகிகள் சுதா தர்மலிங்கம், தவமணி, நாகை சபா, கனேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x