Published : 24 Jan 2021 07:40 PM
Last Updated : 24 Jan 2021 07:40 PM
குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல அதில் நமது வலிமையும் அடங்கி உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் உடன் பிரதமர் மோடி பேசியதாவது:
கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிராக மக்களுக்கு உதவ அனைவரும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏழை மற்றும் பொது மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டும். தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பும் ஒவ்வொருவரையும் நாம் தோற்கடிக்க வேண்டும்.
குடியரசு தின அணிவகுப்பு, நமது அரசியலமைப்புக்கு செலுத்தும் மரியாதை. பலவித மொழிகள், உச்சரிப்புகள், உணவுகள் இருந்தாலும் இந்தியா ஒன்றுதான். குடியரசு தின அணிவகுப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் செயல்படும் அரசியலமைப்பிற்கு தலைவணங்குகிறது.
குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் அடங்கி உள்ளது. நாட்டை வலிமையாக்க நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT