Published : 22 Jan 2021 04:33 PM
Last Updated : 22 Jan 2021 04:33 PM
இந்தியாவில் நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ், ஜனவரி 22ம் தேதி காலை 7 மணி வரை சுமார் 10.5 லட்சம் பேர் (10,43,534) தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 4,049 இடங்களில் 2,37,050 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 18,167 தடுப்பூசி போடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
கோவிட் பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 19 கோடியைக் (19,01,48,024) கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,00,242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மொத்த பாதிப்பு வீதம் இன்று 5.59 சதவீதமாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுவேர் வீதம் 1.78 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,88, 688 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18,002 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 3,620 குறைந்துள்ளது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,02,83,708-ஆக உள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 1,00,95,020 (54.5 மடங்கு)-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.78 சதவீதமாக உள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,334 பேருக்கும், மகாராஷ்டிராவில் 2,886 பேருக்கும், கர்நாடகாவில் 674 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT