Published : 22 Jan 2021 03:29 PM
Last Updated : 22 Jan 2021 03:29 PM
மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி அமைச்சரவையிலிருந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் திரிணமூல் கட்சியிலிருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கல் விலகுவது தொடர்கதையாகி வருகிறது. இது திரிணமூலை கலகலத்துப்போகும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள42-ல் 18 தொகுதிகளில் பாஜகவெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மேற்கு வங்கத்தில் தனிக்கவனம் செலுத்தி தேர்தல வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருகிறது. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலைக் குறிவைத்து பாஜகவை வலுப்படுத்த அதன் தேசிய தலைவர்கள் மாநிலத்திற்கு வருகை தந்ததை அடுத்து அங்கு தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.கடந்த நவம்பரில் மாநில போக்குவரத்து அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்தார்.
கடந்த டிசம்பர் 24 அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தா வந்திருந்தபோது திரிணமூலைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களும 1 எம்.பியும் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் பட்டாச்சார்யா உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் திரிணமூல் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனைஅடுத்து கடந்தவாரம் இந்த எண்ணிக்கை 15 ஆக எகிறியது.
வெள்ளிக்கிழமை டோம்ஜூர் எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான ராஜீப் பானர்ஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஆளும் கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினருக்கு எதிராக குறை சொல்லிக்கொண்டிருந்த ராஜீப் பானர்ஜி தற்போது மம்தா பானர்ஜி முகாமிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வரிசையில் ஒருவராக இணைந்துள்ளார்.
ராஜீப் பானர்ஜி, முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
''அமைச்சரவையிலிருந்து விலகி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். மேற்கு வங்க மக்களுக்கு சேவை செய்வது ஒரு பெரிய கவுரவம் மற்றும் பாக்கியம். இந்த வாய்ப்பைப் பெற்றமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு ராஜீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT