Published : 21 Jan 2021 05:43 PM
Last Updated : 21 Jan 2021 05:43 PM
பஞ்சாப்புக்கு தர வேண்டிய ஊரக வளர்ச்சி நிதியை கொடுக்காமல் நிறுத்திவைத்துள்ளதன் மூலம் கூட்டாட்சி என்ற கட்டமைப்பையே மத்தியில் ஆளும் பாஜக அரசு உருக்குலைத்துவிட்டதாக சிரோன்மணி அகாலிதளக் கட்சியின் மூத்த தலைவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்து வந்த சிரோமணி அகாலிதனம் 2020 செப்டம்பரில் புதிய வேளாண் சட்டம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகியது.
கூட்டணியிலிருந்து விலகிய பிறகு சிரோமணி அகாலிதளம் தொடர்ந்து பாஜக அரசை விமர்சித்து வருகிறது.
இதுகுறித்து சிரோன்மணி அகாலிதளக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான பிரேம்சிங் சந்துமாஜ்ரா ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
"பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குடன் எங்களுக்கு அரசியல் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் மாநிலத்திற்கு சேரவேண்டிய ஊரக வளர்ச்சி நிதியை அளிக்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பஞ்சாபிற்கான ஊரக வளர்ச்சி நிதி ஒதுக்கீட்டை தடுத்து நிறுத்துவதை 'அரசியலமைப்பிற்கு விரோதமானது.
நாம் ஓர் ஒற்றையாட்சி முறையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று எங்கள் கட்சி நம்புகிறது. இது நாடாளுமன்ற அமைப்பிலிருந்து ஜனாதிபதி வடிவிலான அரசாங்கத்தை நோக்கி நகர்வதற்கான அறிகுறியாகும். இது நல்ல முறை அல்ல.
பட்ஜெட்டில் பல்வேறு தலைப்பிலான அத்தியாவசிய செலவினங்களுக்கு செலவழிக்க மாநிலங்களை அனுமதிக்காததன் மூலம் கூட்டாட்சி என்ற கட்டமைப்பையே மத்தியில் ஆளும் பாஜக சீர்குலைத்து வருகிறது என்பதை எதிர்க்கட்சியினருக்கும் பாஜகவின் தோழமைக் கட்சிகளுக்கும் சிரோன்மணி அகாலிதளத் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அகாலி தளக் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT