Last Updated : 21 Jan, 2021 04:08 PM

27  

Published : 21 Jan 2021 04:08 PM
Last Updated : 21 Jan 2021 04:08 PM

பழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின் ‘டிராகன்’ பழத்துக்கு பெயர் ‘கமலம்’: குஜராத் அரசு அறிவிப்புக்கு வியாபாரிகளின் ஆதரவும், எதிர்ப்பும்

கமலம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட டிராகன் பழம் : படம் ஏஎன்ஐ

அகமதாபாத்

ஊர்ப் பெயரை மாற்றிவந்த பாஜக அரசு தற்போது, பழத்தின் பெயரை மாற்றியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் டிராகன் பழத்துக்கு கமலம் எனப் பெயர் மாற்றம் செய்து குஜராத் அரசு அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் ஆதித்யநாத் அரசு பல்வேறு நகரங்களின் பெயரை மாற்றியது, அசாம், இமாச்சலப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுகள் கிராமங்களின் பெயரை மாற்றின. ஆனால், அதற்கும் ஒருபடி மேலாகச் சென்ற குஜராத் அரசு பழத்தின் பெயரை மாற்றியுள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபாபானி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ டிராகன் பழத்தின் பெயரை கமலம் என மறுபெயரிட அரசு முடிவு செய்துள்ளது. டிராகன் என்ற வார்தையின் சீனாவோடு தொடர்புடையது என்பதால், பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. டிராகன் பழம் தாமரை மலர் போல இருப்பதால், அதற்கு சம்ஸ்கிருத வார்த்தையான கமலம் என்று பெயர் மாற்றப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளாக டிராகன் பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கமலம் என்றால் தாமரை. பா.ஜ.க.வின் சின்னம் தாமரை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிராகன் பழத்துக்கு கமலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு வியாபாரிகள் , மக்கள் மத்தியில் ஆதரவும், அதிருப்தியும் கலந்துள்ளது.

வாடிக்கையாளர் பாண்டியா

வதோதராவில் உள்ள பழவிற்பனையாளர் கனு கூறுகையில் “ கமலம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. டிராகன் என்ற பெயர் சீனாவோடு தொடர்புடையது. நாம் இந்தியர்கள், ஆதலால் புதிய பெயருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஹஸ்முக் பாண்டியா எனும் வாடிக்கையாளர் கூறுகையில் “ குஜராத் அரசு டிராகன் பழத்துக்கு கமலம் எனப் பெயர்மாற்றம் செய்ததை வரவேற்கிறேன் .நமது நாட்டின் பாரம்பரியத்துடன் பெயர் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பழவிற்பனையாளர் லட்சுமணன் கூறுகையில் “ டிராகன் பழம் என மக்கள் கேட்டுவந்தார்கள். இனிமேல் கமலம் என்ற பெயரால் சந்தையில் சிக்கல் எழும், பழத்தின் விற்பனையும் பாதிக்கும். மக்கள் டிராகன் பழம் என்றே கூறிபழகிவிட்டார்கள், திடீரெனப் பெயரை மாற்றினால், பழத்துக்கு இருக்கும் விளம்பரம் குறைந்துவிடும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x