Published : 20 Jan 2021 08:55 AM
Last Updated : 20 Jan 2021 08:55 AM
நாடு தழுவிய மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் நான்காம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 2021 ஜனவரி 16 அன்று பிரதமரால் இது தொடங்கி வைக்கப்பட்டது.
11,660 அமர்வுகளில் 6,31,417 சுகாதார பணியாளர்களுக்கு (தமிழ்நாட்டில் 25,251 நபர்கள் உட்பட) நேற்று மாலை 6 மணி வரை வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கிறதென்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை 6 மணி வரை 3,800 அமர்வுகள் நடைபெற்றன.
நாடு தழுவிய மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் நான்காம் நாளில் 1,77,368 பயனாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டவர்களில் ஒன்பது பேருக்கு மட்டுமே மருத்துவமனை அனுமதி தேவைப்பட்டது. டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் மூன்று பேர் வீடு திரும்பியுள்ளனர், ஒருவர் கண்காணிப்பில் உள்ளார்.
உத்தரகாண்டில் உபாதைக்கு உள்ளானவர்களில் இன்னுமொருவர் வீடு திரும்பி உள்ளார். கர்நாடகாவில் ஒருவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார், இன்னுமொருவர் கண்காணிப்பில் இருக்கிறார். சத்தீஸ்கரிலும் ஒருவர் வீடு திரும்பி உள்ளார். ராஜஸ்தானில் ஒருவர் உடல் நலம் சீரான நிலையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT