Published : 18 Oct 2015 11:54 AM
Last Updated : 18 Oct 2015 11:54 AM
பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லாலு தனது இளைய மகன் தேஜஸ்வி பிரசாத் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் கடந்த 27-ம் தேதி பேசினார். இத்தேர்தல் தாழ்த்தப்பட்ட மற்றும் உயர்குடி மக்களுக்கு இடையிலான போர் என்று கூறிய லாலு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அப் போது அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லாலு மீது வழக்கு பதிவு செய்ய வைசாலி மாவட்ட நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதில் இந்திய தண்டனை சட்டம் 420, 406, 34-வது பிரிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 138-வது பிரிவின் கீழ் லாலு மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் லாலு மீது வழக்குகள் பதிவானதால் அவ ரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியின் சமூக செயற்பாட்டாளர் நரேஷ் கத்யன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் கத்யன் கூறும்போது, “குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற் றவர்கள் மேல்முறையீட்டில் ஜாமீன் பெற்றிருக்கும் போது, குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. எனது புகார் மீது தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதி மன்றத்தை அணுகுவேன்” என்றார்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு கள் சிறைத் தண்டனை வழங்கி ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013, அக்டோ பரில் உத்தரவிட்டது. இத னால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதுடன் 6 ஆண்டு களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. தீர்ப்பை அடுத்து சிறையில் அடைக் கப்பட்ட லாலுவுக்கு உச்ச நீதி மன்றம் கடந்த 2013, டிசம்பரில் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் லாலு மீதான புகார் குறித்து பிஹார் தேர்தல் அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “லாலு வுக்கு ஜாமீன் அளித்தபோது நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனை களை பொறுத்து, ஜாமீன் ரத்தாக வாய்ப்புள்ளது. ஆனால், லாலுவின் ஜாமீனை ரத்து செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. வேண்டுமானால், லாலு மீதான புகாரை குறிப்பிட்ட மாநில அரசு அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கலாம். இதன் மீது அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.
உ.பி.யின் தாத்ரி பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பேசிய லாலு, “இந்துக்களும் மாட்டிறைச்சி உண்கிறார்கள்” என்று கூறியிருந்தார். இதன் மீதும் கிளம்பிய சர்ச்சையை அடுத்து லாலு மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முசாபர் பூர் நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு வைசாலியில் தேர்தல் விதி களை மீறும் வகையில் லாலு பேசி யதாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாஜகவின் தூண்டுதலின் பேரில் லாலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது கட்சியினர் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT