Published : 23 Oct 2015 09:24 AM
Last Updated : 23 Oct 2015 09:24 AM
டெல்லியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 4,030 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 298 வழக்குகளின் விசாரணை முடிவடைந்தாலும் 67-ல் மட்டுமே குற்றாவளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர் பலாத்கார வழக்கு விசாரணை யின்போது, மாநில அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் இந்த புள்ளி விவரம் தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
டெல்லியில் கடந்த 4 ஆண்டு களில் 4,030 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 7 சதவீதமாக 298 வழக்கு களில் விசாரணை முடிந்தாலும் அவற்றில் 67-ல் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப் பட்டுள்ளனர். இதில், உபேர் டிரை வர் ஷிவ்குமார் யாதவ் வழக்கும் உள்ளடங்கும். எஞ்சிய 75 சதவீத வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட வர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணையிலிருந்து குற்றவாளிகள் தப்பிப்பதற்கான காரணங்கள் குறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “பெரும் பாலான பலாத்கார வழக்குகளில் புகார் அளிப்பவர்கள் பின்வாங்கி விடுகிறார்கள். பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்து விடுகின்றனர். இதனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கின் விசாரணையின் போது எளிதாகத் தப்புவதை எங்களால் தடுக்க முடியவில்லை” என்றனர்.
பாலியல் பலாத்கார வழக்கு கள் பலவற்றில் காவல் துறை யினர் முறையாக விசாரணை நடத் தாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விடுவதும் குற்றவாளி கள் தப்பிப்பதற்கான காரண மாகக் கருதப்படுகிறது. அவ் வழக்குகளில் சிரத்தை எடுத்து ஆதாரங்களைச் சேகரிக்க காவல் துறையினர் முன்வருவதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக பெண்ணிய வாதி கவிதா கிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நீதி மன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். சமூகத் தின் பார்வையை எதிர்கொள்ளத் தயங்கியே புகார் அளிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பின் வாங்கிவிடுகின்றனர். விரைவு நீதிமன்றங்களை அதிகரித்தால் இந்த நிலை மாறும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT