Published : 18 Jan 2021 03:55 PM
Last Updated : 18 Jan 2021 03:55 PM
கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 19, 2021) பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது.
பழங்குடி மாணவர்களுக்கு கதர் துணிகளை வாங்குவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (பிஎம்இஜிபி) செயல்படுத்துவதற்காக பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம், கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்துடன் இணைவதற்கு மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்துவதற்காக கதர் கலைஞர்களுக்கும், நாடெங்குமுள்ள பழங்குடி மக்களுக்கும் ஊக்கமளித்து அதன் வாயிலாக உள்ளூரில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஏகலைவன் உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2020-21 ஆம் ஆண்டில் ரூ.14.77 கோடி மதிப்பில் 6 லட்சம் மீட்டருக்கும் அதிகமான கதர் துணியை பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம் கொள்முதல் செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT