Published : 18 Jan 2021 08:08 AM
Last Updated : 18 Jan 2021 08:08 AM

பறவை காய்ச்சல் இல்லாத மாநிலங்களில் கோழி பண்ணை பொருட்களுக்கு தடை வேண்டாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி

பறவை காய்ச்சல் இல்லாத மாநிலங்களில் கோழி பண்ணைகள் மற்றும் பண்ணை பொருட்களின் விற்பனை மீது தடை விதிக்க வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

2021 ஜனவரி 17-ம் தேதி வரை, மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் மத்திய பிரதேசத்தின் மன்த்சார் மாவட்டத்தில் உள்ள மத்திய கோழிப்பண்ணை வளர்ச்சி நிறுவனத்தில் 2021 பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், மத்தியப் பிரதேசத்தின் பன்னா, சாஞ்சி, ரெய்சன், பாலாகட் (காகம்), ஷியோபூர் (காகம், ஆந்தை), மன்த்சார் (அன்னம், புறா) மாவட்டங்களிலும், சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் (காகம், புறா), தண்டேவாடே (காகம்) மாவட்டங்களிலும் உத்தரகாண்டின் ஹரித்துவார் மற்றும் லான்ஸ்டௌன் வனப்பகுதியில் காகங்களின் மாதிரிகளிலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக வேல்லியில் நாரை இன பறவைகளின் மாதிரியை சோதனையிட்டதில் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் பறவைகள் மாதிரியை சோதனையிட்டதில் பறவை காய்ச்சல் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமையை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுக்கள், ஆய்வை மேற்கொண்டு வருகின்றது.

நன்றாக சமைக்கப்பட்ட பண்ணை இறைச்சி உணவுகளால் நோய் பரவாது என்றும், இது வரை பறவை காய்ச்சல் இல்லாத மாநிலங்களில் கோழி பண்ணைகள் மற்றும் பண்ணை பொருட்களின் விற்பனை மீது தடையேதும் விதிக்க வேண்டாமென்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், வதந்திகளை நம்ப வேண்டாமென்று பொதுமக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து, செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x