Published : 25 Mar 2014 10:42 AM
Last Updated : 25 Mar 2014 10:42 AM
பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரைப் போன்று மேலும் சில பாஜக பிரமுகர்கள், கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
பாஜகவின் விவசாயிகள் பிரிவுத் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுபாஷ் மஹரியா ராஜஸ்தானின் சிகார் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து சுபாஷ் கூறியதா வது: “சிகார் தொகுதிக்குச் சற்றும் தொடர்பில்லாத சுவாமி சுமேதானந்தை வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியுள் ளது. இதனால், கட்சியினரும் தொகுதி மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிப் பேரணியில் பங்கேற்ற தொண்டர்கள், சிகார் தொகுதியில் நான் சுயேச்சை யாக களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்க ளின் கோரிக்கையை ஏற்று சுயேச் சையாக போட்டியிட உள்ளேன்” என்றார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், பக்சர் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான 71 வயது லால்முனி சவுபே, அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து சவுபே கூறுகையில், “அத்வானி, ஜஸ்வந்த் சிங் போன்ற மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படு கிறார்கள். பக்சர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் வெளியில் இருப்பவர் களை வேட்பாளர்களாக்குகின் றனர்” என்றார்.
குஜராத்தின் கிழக்கு அகமதா பாத் தொகுதியின் பாஜக எம்.பி.யான ஹரண் பதக்கிற்கு அங்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி, பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து ஆலோ சித்து வருவதாக ஹரண் பதக் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ரகுநந்தன் சர்மா, மண்ட்பார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளார்.
இத்தொகுதிக்கு அருகி லுள்ள பிந்த் தொகுதி எம்.பி. யான அசோக் ஆர்கலுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருவரும் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள் ளனர். வாய்ப்பு கிடைக்காத கட்சிப் பிரமுகர்கள் சுயேச்சையாக களம் இறங்கவுள்ளது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் சதான்ஷு திரிவேதியிடம் கேட்டபோது, “பாஜகவில் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவது இல்லை. அனைத்து தலை வர்களுமே அவர்களின் திறமைகளுக்கு ஏற்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT