Last Updated : 15 Jan, 2021 09:58 AM

 

Published : 15 Jan 2021 09:58 AM
Last Updated : 15 Jan 2021 09:58 AM

டெல்லி, உ.பி., ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிருடன் மூடுபனி: அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு 

புதுடெல்லி

டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் குளிருடன் மூடுபனி நிலவுகிறது. அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் என்ற வானிலை அறிவிப்பால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் தற்போது வீசும் காற்றுடன் கடும் குளிர் நிலவுகிறது. இத்துடன் கண்களை மறைக்கும் மூடுபனியும் இன்று காலை முதல் ஏற்படத் தொடங்கியது.

இதனால், வடக்கு ரயில்வேயின் சுமார் 14 ரயில்கள் இன்று பல மணி நேரம் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டது. மூடுபனியால் சாலைகளில் வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் செல்லும் நிலை உருவானது.

அதேசமயம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பனிப் பொழிவு தொடர்கிறது. இதனுடன் வேகமாக வீசும் குளிர் காற்றினாலும் வட மாநிலவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வட மாநிலங்களில் தற்போதுள்ள குளிர் நிலை மேலும் மூன்று நாட்களுக்கு தொடரும்.

வட கிழக்கு மாநிலங்களிலும் இதே நிலை நிலவும். அடுத்த நான்கு நாட்களுக்கு வழக்கத்திற்கு மாறான குறைந்த தட்பவெட்ப நிலை ஏற்படும்'' எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வட மாநில அரசுகளின் சார்பில் கடும் குளிர் மீதான எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடப்பட்டுள்ளது. இக்குளிரினால், சாலையோரம் வாழும் பொதுமக்களின் வாழ்க்கை பல்வேறு வகைகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x