Published : 14 Jan 2021 02:02 PM
Last Updated : 14 Jan 2021 02:02 PM
அடுத்த மாதம் பாஜகவில் சேர சுமார் 50 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் 2021 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அங்கு பாஜக இம்முறை வெற்றிக்கனியை பறித்தே ஆக வேண்டுமென மிகவும் தீவிரவாக செயல்பட்டு வருகிறது. இதற்காக அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து மேற்குவங்கம் வந்த வண்ணம் உள்ளனர். இதனை அடுத்து மேற்கு வங்கத்தில் பாஜகவை பலப்படுத்தும் முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் கட்சியை பலவீனப்படுத்தி அக்கட்சியிலிருந்து அமைச்சகர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுத்து வருகிறது பாஜக. கடந்த ஆண்டு பாஜகவில் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி உட்பட பல டி.எம்.சி தலைவர்கள் இணைந்தனர்.
எனினும் தங்கள் நம்பிக்கையை திரிணமூல் காங்கிரஸ் இழந்துவிடவில்லை. தொடர்ந்து மும்முரமாக செயல்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது. மேற்கு வங்க அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ''பாங்குராவைச் சேர்ந்த எம்எல்ஏ துஷார் பாபு நேற்று மீண்டும் இணைந்தார். தேர்தலுக்கு முன்னதாக, மே முதல் வாரத்திற்குள் ஆறு ஏழு எம்.பி.க்கள் உடனடியாக டி.எம்.சியில் சேருவார்கள். எங்களை விட்டு வெளியேறிய எம்.எல்.ஏக்கள் கூட மீண்டும் சேர வரிசையில் நிற்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் திலீப் கோஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மல்லிக் பாபுவின் கூற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரே ஒரு பூத் கமிட்டி தலைவரை அவர் தங்கள் கட்சியில் சேரச் சொல்லுங்கள் பார்ப்போம். உண்மை நிலைமையே வேறு. அடுத்த மாதம் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏககள் 50 பேர் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT