Published : 13 Jan 2021 05:03 PM
Last Updated : 13 Jan 2021 05:03 PM

பயிர் காப்பீட்டு திட்டம் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு அனைத்துப் பயனாளிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 5 வருடங்கள் ஆகின்றன. 2016 ஜனவரி 13 அன்று, இந்திய விவசாயிகளின் பயிர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை கையாளும் முறையை வலுப்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்த மத்திய அரசு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, குறைவான, ஒரே மாதிரியான கட்டணத்தில் விரிவான காப்பீட்டுத் தீர்வை அளிக்கும் மைல்கல் நடவடிக்கையாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

விவசாயிகளின் பங்குத் தொகைக்கு அதிகமான காப்பீட்டு கட்டணம் மாநில அரசாலும், மத்திய அரசாலும் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 90 சதவீத கட்டண மானியத்தை ஏற்கிறது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு முன் இருந்த சராசரி காப்பீட்டு தொகையான ஒரு ஹெக்டேருக்கு ரூ.15,100 என்பது, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.40,700 ஆக உயர்த்தப்பட்டது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “இயற்கை சீற்றங்களிலிருந்து கடும் உழைப்பாளிகளான விவசாயிகளைப் பாதுகாக்கும் முக்கிய முன்முயற்சியான பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் இன்று ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பரப்பளவை அதிகரித்து, இடர்பாடுகளைக் களைந்து, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பயனளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

விவசாயிகள் அதிக பயனடைவதை பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் எவ்வாறு உறுதி செய்கிறது?

உரிமை கோரல்களை தீர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மையை எவ்வாறு ஏற்படுத்துகின்றது?

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்துடன் தொடர்பான இது போன்ற அம்சங்களுக்கு நமோ செயலியில் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள் என்னும் பகுதியில் புதுமையான வகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x