Published : 13 Jan 2021 02:29 PM
Last Updated : 13 Jan 2021 02:29 PM
கரோனா தடுப்பு மருந்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும் என உத்தரப்பிரதேசத்தின் பாஜக எம் எல் ஏவான சங்கீத் சோம் கருத்து கூறியுள்ளார். இவரது விமர்சனம் சர்ச்சையை கிளம்பியுள்ளது.
உ.பி.யின் மேற்குப்பகுதியில் மீரட்டின் சர்தானா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சங்கீத் சோம். இவர் நேற்று சந்தவுலியில் நிகழ்ந்த பாஜகவின் இளைஞர் அணி சார்பிலான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
இதன் மேடையில் பேசிய சங்கீத் சோம் கூறும்போது, ‘கரோனா பரவல் காலச்சூழலில் நம் நாடு உள்ளது. இதை தடுக்க தடுப்பு மருந்து வந்து விட்டது.
இந்த தடுப்பு மருந்துகளையும் சிலர் பாகிஸ்தானியர் மனநிலையில் எதிர்த்து வருகின்றனர். இதுபோல், தடுப்பு மருந்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் சென்று விடலாம்.’ எனத் தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் உ.பி.யின் நடைபெறும் என்கவுண்டர்கள் மீதான விமர்சனங்கள் பற்றியும் சங்கீத் சோம் கருத்து கூறினார். இதில் அவர், என்கவுண்டர்கள் மீது கேள்வி எழுப்புபவர்களுக்கு பரந்த அறிவு இல்லை எனக் குறிப்பிட்டார்.
பாஜக எம்எல்ஏவான சங்கீத் சோம் பாகிஸ்தானை குறிப்பிட்டு பேசுவது முதன்முறையல்ல. எனவே, அவரது கருத்திற்கு உபியின் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT