Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM

எம்எஸ்பி-யை விட விவசாயிகளிடம் இருந்து கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்த ரிலையன்ஸ்

கோப்புப் படம்

ராய்ச்சூர்

அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) விட கூடுதல் விலைக்கு 1,000 குவிண்டால் சோனா மசூரி ரக நெல்லை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை காலாவதியாகி விடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக ரிலையன்ஸ் நிறுவ னத்தின் இந்த ஒப்பந்தம் அமைந் துள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிந்தனூர் தாலுகாவில் உள்ள விவசாயிகள் கூட்டமைப்புடன் இதற்கான ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

இங்குள்ள ஸ்வஸ்திய விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்துடன் (எஸ்எப்பிசி) ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகவர்கள் ஒப்பந்தம்செய்துள்ளனர். இந்த கூட்டமைப்பானது எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டிருந்தது. தற்போது முதல் முறையாக நெல் விற்பனையில் இறங்கியுள்ளது.

இந்த கூட்டமைப்பில் 1,100 விவசாயிகள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். 16 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதாக நெல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு குவிண்டால் ரூ.1,950 விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விலையானது குவிண்டால் ரூ.1,868 ஆகும். தற்போது குவிண்டாலுக்கு ரூ.82 கூடுதல் விலையில் வாங்க ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

எஸ்எப்பிசி கூட்டமைப்பு ரூ.100 பரிவர்த்தனைக்கு 1.5 சதவீதம் கமிஷன் பெறும். நெல்லை மூட்டையாகக் கட்டி கிடங்கில் கொண்டு சேர்ப்பது வரை விவ சாயிகள் பொறுப்பாகும்.

இதற்கு ஆகும் பேக்கிங் மற்றும் போக்குவரத்து செலவை விவசாயிகளே ஏற்க வேண்டும். விவசாயிகள் சிந்தனூரில் உள்ள கிடங்குக்கு நெல் மூட்டைகளை கொண்டு சேர்க்க வேண்டும்.

கிடங்கில் உள்ள நெல்லை மூன்றாம் தரப்பு பிரதிநிதிகள் பரிசோதித்து அது ரிலையன்ஸ் வகுத்துள்ள விதிகளுக்கு உள்பட்டதாயிருப்பின் அது ஏற்கப்படும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைக்குப் பிறகே நெல்லுக்குரிய பணம் எஸ்எப்பிசிக்கு ஆன்லைன் மூலம் வரும்.அதை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைப்போம் என்று எஸ்எப்பிசி அமைப்பின் நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜுன் தெரி வித்துள்ளார்.

கிடங்குக்கு அனுப்பப்படும் நெல், வழியில் மாற்றுவது போன்ற தில்லுமுல்லுகளைத் தடுக்கும் வகையில் வாகனங் கள் ஜிபிஎஸ் மூலம் கண் காணிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x