Last Updated : 10 Jan, 2021 04:10 PM

1  

Published : 10 Jan 2021 04:10 PM
Last Updated : 10 Jan 2021 04:10 PM

துயரம் மிக்க இந்நேரத்தில் இந்தோனேசியாவுடன் இந்தியா துணை நிற்கிறது: மோடி இரங்கல்

பிரதமர் மோடி | கோப்புப் படம்.

புதுடெல்லி

துயரம் மிக்க இந்நேரத்தில் இந்தோனேசியாவுடன் இந்தியா துணை நிற்கிறது என்று விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் எண் 182 தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சோகர்னோ ஹட்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் 10,000 அடி உயரத்தில் பறந்தபோது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. புறப்பட்ட 4-வது நிமிடத்திலேயே சரியாக காலை 7.40 மணிக்கு விமானம் மாயமானதாகக் கூறப்படுகிறது. இவ்விமானத்தில் 62 பேர் பயணித்தனர்.

இதனையடுத்து விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது என்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், இந்தோனேசியாவின் மீட்புப் படை வீரர்கள், ஜாவா கடலில் 23 மீட்டர் (75 அடி) ஆழத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைந்த பாகங்களையும், இறந்த பயணிகளின் உடல் பாகங்களையும் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த இரங்கல்:

"இந்தோனேசியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். துயரம் மிக்க இந்நேரத்தில் இந்தோனேசியாவுடன் இந்தியா துணை நிற்கிறது.''

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x